மோசமான ட்ரோல்; மதிப்பெண் தான் முக்கியம் முடியில்ல.. முதலிடம் பிடித்த மாணவி பதிலடி!
சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டதற்கு மாணவி பதிலடி கொடுத்துள்ளார்.
கடுமையான ட்ரோல்
உத்தரப் பிரதேசம் 10வது பொது தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. அதில், பிராச்சி நிகாம் என்ற மாணவி 98.50 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
ஆனால், அவருடைய முகத்தோற்றத்தைக் காரணம் காட்டி நெட்டிசன்களால் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார். தற்போது "மக்கள் என்னை ட்ரோல் செய்வதைப் பார்த்தபோது, அது என்னைப் பெரிதும் தொந்தரவு செய்யவில்லை.
‘அம்மா… கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே’ : பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை - சிக்கிய கடிதத்தில் உருக்கம்
மாணவி பதிலடி
என் மதிப்பெண்கள் தான் முக்கியம், என் முகத்தில் உள்ள முடி அல்ல. உத்தரப்பிரதேச பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற என்னுடைய படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டபோது, சிலர் என்னை ட்ரோல் செய்தனர். அதே நேரத்தில், என்னை ஆதரித்த பலரும் இருந்தனர். என்னை ஆதரித்த அனைவருக்கும் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது முகத்தில் உள்ள முடியைப் பற்றி வித்தியாசமாக நினைப்பவர்கள் தொடர்ந்து என்னை ட்ரோல் செய்யலாம். அது எனக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சாணயக்யர்கூட அவரது தோற்றத்திற்காக ட்ரோல் செய்யப்பட்டார், ஆனால் அது அவரை ஒரு வகையிலும் பாதிக்கவில்லை" என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.