‘அம்மா… கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே’ : பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை - சிக்கிய கடிதத்தில் உருக்கம்
மாங்காடு அருகே 11ம் வகுப்பு மாணவி ஒருவர் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகளின் புகார்கள் அதிகரித்து வருகிறது. சில மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் சென்னை மாங்காடு அருகே 11ம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். அப்போது மாணவி எழுதி வைத்த கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில்,
இதுக்கு மேல முடியாது, மனுசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லைகள் முடியல.. எனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்ல.. என்னால நிம்மதியா தூங்க முடியல.. அந்த கனவு வந்து டார்ச்சர் பண்ணுது, படிக்க முடியல, பாதுகாப்பே இல்ல, இந்த அசிங்கமான சமூகத்துல என்னோட கனவெல்லாம் போயிருச்சு, எவ்ளோ வலிகள் எனக்கு,.. பெற்றோர்களே உங்க குழந்தைகளுக்கு எப்படி பெண்களை மதிப்பது என்பதை கற்றுக்கொடுங்கள்.. எனக்கு நியாயம் கிடைக்கும்னு நினைக்கிறேன்.,.. சொந்தங்களையும், ஆசிரியர்களை மட்டும் நம்பாதீர்கள் என குறிப்பிட்டுள்ள அந்த மாணவி, அம்மா போயிட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு என உருக்கமாக எழுதியுள்ளார். பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்றும் SchoolisNotSafety என மாணவி உருக்கமாக எழுதி இருக்கிறார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.