சிறுமி பாலியல் வழக்கு - உ.பி. பாஜக MLA'விற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

BJP Uttar Pradesh
By Karthick Dec 15, 2023 11:27 AM GMT
Report

2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி எம்.எல்.ஏ. பதவியை கோந்த் இழந்துவிட்டார்

பாஜக எம்.எல்.ஏ

பாலியல் வன்கொடுமை உத்திர பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014ம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

up-bjp-mla-accusted-in-child-rape-case

அந்த சிறுமியின் சோகதரர் அளித்த புகாரின் பேரில் ராம்துலார் கோண்ட் மீது போக்சோ சட்டம் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த பாலியல் வன்கொடுமை நடைபெறும்போது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை.

தொடரும் சிக்கல் ..!!எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகவேண்டும்..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தொடரும் சிக்கல் ..!!எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகவேண்டும்..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

நீதிமன்ற அதிரடி

தேர்தலில் வெற்றிபெற்று அவர் பாஜக எம்.எல்.ஏ ஆனதால், இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்தபோது, ராம்துலார் கோண்ட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

up-bjp-mla-accusted-in-child-rape-case

மேலும் , இந்த வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும்இரண்டு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்நிலையில், இன்று வெளியான தீர்ப்பில் குற்றவாளியான எம்.எல்.ஏ ராம்துலார் கோந்த் குற்றவாளி என சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம், 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி எம்.எல்.ஏ. பதவியை கோந்த் இழந்துவிட்டார்