தொடரும் சிக்கல் ..!!எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகவேண்டும்..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Tamil nadu Kodanad Case Edappadi K. Palaniswami Madras High Court
By Karthick Dec 15, 2023 10:13 AM GMT
Report

 நடைபெற்று வரும் கோடநாடு வழக்கில் சாட்சியம் அளிக்க தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு வழக்கு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு வழக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவளரும், அதிமுகவின் பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை தொடர்ந்து கொடுத்து வருகின்றது.

hc-orders-eps-to-appear-in-kodanad-murder-case

இந்த விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி, வீடியோ வெளியிட்ட நிலையில், டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான் வாளையார் ,மனோஜ் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி 2019-ஆம் ஆண்டு மானநஷ்ட வழக்கும் தொடர்ந்திருந்தார். மேலும், இந்த வழக்கில் தான் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியம் வழங்க இயலாது என்று குறிப்பிட்டு, தனது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.

நேரில் ஆஜராகவேண்டும்

இதில், உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்து வரும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இதனை எதிர்த்து சாமுவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

hc-orders-eps-to-appear-in-kodanad-murder-case

இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் முகமது ஷஃபிக், ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று குறிப்பிட்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.