தீண்டாமைக் கொடுமை.. ஆசிரியர்கள் செய்த கொடூரம் - அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்!
அரசு பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்கள் மீது 3 ஆசிரியர்கள் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி
தமிழ்நாட்டில் சமீபகாலமாகத் தீண்டாமை கொடுமை அரங்கேறி வருகிறது. குறிப்பாக வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களை அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று கடவுள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்தது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் சேர்ந்து பட்டியலின மாணவனைத் தாக்கியது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து கதிகலங்க வைத்தது. மேலும் தமிழ்நாட்டில் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை அடையாளம் கண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் அரசுப் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்கள் மீது 3 ஆசிரியர்கள் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கோடம்பாக்கம், பதிப்பகச்செம்மல் க.கணபதி அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
தீண்டாமைக் கொடுமை
இந்த பள்ளியில் படிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களைத் தரையில் உட்காரவைத்து பாகுபாடு காட்டுவதாகவும்,மாணவர்களிடம் தீண்டாமை பாராட்டு,உள்ளிட்ட செயல்களில் ஆசிரியர்கள் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் சபாநாயகர் அப்பாவுவின் தனிச் செயலாளரின் மனைவி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.