உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்: 5 லிட்டர் பெட்ரோல் பரிசு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதுடன் சில நகரங்களில் ரூ.100ஐ எட்டியுள்ளது. இதனையடுத்து LPG சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன, இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்ந்ததும் நபர் ஒருவர் கிரிக்கெட் பேட்டை பிடித்துக் கொண்டு சென்சூரி அடித்தது போன்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.
இந்த படம் வைரலான நிலையில், உண்மையிலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஞாயிறன்று மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்த கிரிக்கெட் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் சலாவுதீன் அப்பாஸி என்ற வீரர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார், இவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil
தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மகாநாயக்க தேரரிடம் வாங்கி கட்டிய எதிர்கட்சி எம்பிக்கள் IBC Tamil