இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் - அரசு அனுமதி!

Italy
By Sumathi Mar 24, 2025 02:30 PM GMT
Report

திருமணம் ஆகாதவர்களும் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை தத்தெடுப்பு

இத்தாலியில் திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தையை தத்தெடுக்க முடியும். 1983ல் இயற்றப்பட்ட இந்த சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தின்படி மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் - அரசு அனுமதி! | Unmarried People Allowed To Adopt Baby Italy

எனவே, இதனை எதிர்த்து குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

இங்கேயும் வந்துட்டீங்களா? முழுவதுமாக AI மூலம் தயாரிக்கப்பட்ட நாளிதழ் வெளியீடு!

இங்கேயும் வந்துட்டீங்களா? முழுவதுமாக AI மூலம் தயாரிக்கப்பட்ட நாளிதழ் வெளியீடு!

நீதிமன்ற தீர்ப்பு

அதன்படி, வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுப்பது வெகுவாக குறைந்து வருகிறது. இது குடும்ப சூழலில் வளர்வதற்கான குழந்தைகளின் உரிமையை மறுப்பதாக உள்ளது. எனவே 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம் - அரசு அனுமதி! | Unmarried People Allowed To Adopt Baby Italy

இதன் மூலம், திருமணம் ஆகாதவர்களும் இனிமேல் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும். முன்னதாக, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.