2குழந்தைகள் பெற்றுக்கொண்டால் போதும்..வாழ்நாள் முழுவதும் வரி கட்ட தேவை இல்ல - எங்க தெரியுமா?
இரண்டு குழந்தைகள் அல்லதுஅதற்கும் மேல் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்டத் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
குழந்தைகள்
சீனாவில் மட்டுமல்ல ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளில் சமீப ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தனிநபரின் வருமானம் மற்றும் பொருளாதார நெருக்கடி என்று கூறப்படுகிறது.
இந்த வரிசையில் ஐரோப்பா நாடான ஹங்கேரியில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் ஹங்கேரியில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 30 வயது வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக்க அறிவிக்கப்பட்டுள்ளது.