அமைச்சர் குடும்பத்தை தாக்கிய மரம் கும்பல்.. மருத்துவமனையில் பேரன் - பரபரப்பு!
மர்ம கும்பல் ஒன்று அமைச்சரின் குடும்பத்தை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் குடும்பம்
தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் சாத்தூர் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இவரது மகன் ரமேஷும் அமைச்சரின் பேரன் கதிர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இரவு காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது 6 பேர் கொண்ட கும்பல் இவர்களுக்கு பின்னல் அமர்ந்து கூச்சலித்து அவதூறு வார்த்தைகளை பேசியுள்ளனர். இதனை தட்டி கேட்டதால் அமைச்சர் மகன் மற்றும் பேரன் மீது அந்த கும்பல் தாக்கியுள்ளனர்.
தாக்குதல்
இந்நிலையில், படுகாயம் அடைந்த அமைச்சரின் பேரன் கதிர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அந்த 6 பேர் கொண்ட கும்பலும் திரையரங்கின் அவசர வாயில் வழியாக தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அமைச்சர் மகன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.