மெக்சிகோவில் மதுக்கடையில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு... - 9 பேர் பரிதாப பலி..!

Attempted Murder Mexico
By Nandhini Nov 12, 2022 05:45 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மெக்சிகோவில் மதுக்கடையில் நேற்று நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொலை

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள அபாசியோ எல் ஆல்டோ என்ற குக்கிராமத்தில், நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய ஒரு மர்ம கும்பல் மதுபான கடைக்குள் நுழைந்து அங்கே இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், தேசிய காவலர் மற்றும் பல மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்க முகமைகள் சம்பவ இடத்திற்கு துருப்புக்களை அனுப்பும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

mexico-shooting-9-mumbers-killed