வந்தாச்சு ப்ளூ வாக்சின்.. 60+ வயதினருக்கு தொல்லை இல்லை இனி.!
ப்ளூ வைரஸ்களுக்கு என்று புதிதாக யுனிவர்சல் ப்ளூ வாக்சின் உருவாக்கப்பட்டுள்ளது.
ப்ளூ வைரஸ்
இன்ப்ளூவென்சா என்பதை தான் சுருக்கி ப்ளூ வைரஸ் என்பார்கள். இது சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இவ்வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கும்.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விட கடும் சிரமம் ஏற்படுவது, நெஞ்சு வலி, தொடர்ந்து மயக்கம், வலிப்பு, தசைகளில் வலி போன்றவை ஏற்படும். பொதுவாக ப்ளூ வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் வீட்டில் ஓய்வில் இருந்துகொண்டு ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு வெந்நீர் பருகி, ஆவி பிடித்து வந்தால் அறிகுறிகள் 4 முதல் 5 நாட்களில் குறைந்து குணமாகிவிடுவார்கள்.
ப்ளூ வாக்சின்
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் ப்ளூ வைரஸ் வகைக்கு எதிரான யுனிவர்சல் ப்ளூ வாக்சின் என்ற பெயரிலான தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இது 60+ வயதினருக்கு ப்ளூ வைரஸ் தொற்றில் இருந்து சிறந்ததொரு பாதுகாப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது ப்ளூ வைரஸின் துணை வகைகளையும் அழிக்கக் கூடியது எனக் கூறுகின்றனர்.
மேலும், இது உலகம் முழுக்க பயன்பாட்டுக்கு வர இரண்டாண்டுகள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.