காவிரி நீரை சட்டப்படி பங்கீடு செய்ய முடியாது - மத்திய அமைச்சர் குமாரசாமி
மழை பெய்யாத காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன.
ஆனாலும், இந்த சிக்கல் தீர்ந்தபாடில்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
குமாரசாமி
இந்த நிலையில், கர்நாடகா முன்னாள் பா.ஜ.க முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சரான குமாரசாமி இன்று (30.09.2024) தனி விமானம் மூலம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அதனை தொடர்ந்து சேலம் சென்று அங்குள்ள உருக்காலையை ஆய்வு செய்ய உள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்துஉரிய நேரத்தில் பொழியும் போது காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மழை பொழிவு குறைவான காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது. நீர்ப் பங்கீடு குறித்து இருமாநில அரசுகளும் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் give and take policy முறைதான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு. காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என பேசியுள்ளார்.