மேகதாது அணை விவகாரம்; மத்திய அரசின் நிலைப்பாட்டில் சந்தேகம் உள்ளது - துரைமுருகன்
மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
மேட்டூர் அணை
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நிரம்பியதையடுத்து, உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவருகிறது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவேரி கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
துரைமுருகன்
அப்பொழுது அங்கிருந்து அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாக சந்தேகம் உள்ளது.
உச்ச நீதி மன்ற தீர்ப்பிலோ, காவேரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ மேகதாது என்ற வார்த்தையே இல்லாத போது காவேரி நடுவர் மன்ற அதை பற்றி பேசுகிறது. மேகதாதுவில் கர்நாடக அரசை அணை கட்ட விடவே மாட்டோம். நிதி ஆதாரத்தை பொறுத்து மேட்டூர் அணையில் வெளியேறும் உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். என பேசியுள்ளார்.