மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை - இரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

Sexual harassment India
By Vidhya Senthil Mar 03, 2025 02:54 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

  மத்திய இணை அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா 

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சாந்த் முக்தை யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகள் கலந்து கொண்டார்.

மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை - இரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! | Union Minister Daughter Harassed In Maharashtra

அந்த யாத்திரையின் போது  இரவு நேரத்தில் அங்கிருந்த சில இளைஞர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தரத்தில் செல்லும் மின்சார வயர்கள்..புல்-அப் செய்யும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ!

அந்தரத்தில் செல்லும் மின்சார வயர்கள்..புல்-அப் செய்யும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ!

பாலியல் தொல்லை

மேலும் இது குறித்துப் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னா,’’பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை - இரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! | Union Minister Daughter Harassed In Maharashtra

அதில் அனிகேத் குய் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் என்பது தெரியவந்தது. மேலும் 6 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.