அந்தரத்தில் செல்லும் மின்சார வயர்கள்..புல்-அப் செய்யும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ!
அந்தரத்தில் செல்லும் மின்சார வயர்களில் இளைஞர் ஒருவர் புல்-அப் செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வயர்
மக்கள் ஸ்டண்ட் செய்து, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது, அவை நெட்டிசன்கள் மத்தியில் வைரலாவது வழக்கம். ஒரு சிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் கூட பிரபலமாக வேண்டுமென்று வீடியோக்களை பதிவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் அந்தரத்தில் செல்லும் மின்சார வயர்களில் இளைஞர் ஒருவர் புல்-அப் செய்யும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு நடுவில் மின்சார கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மின்சார கம்பத்தில் செல்லும் இரு கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஒரு இளைஞர் புல் அப் செய்கிறார். பின்பு கால்களைக் கம்பிகளுக்கு இடையே பிடித்து உடற்பயிற்சி செய்கிறார்.இந்த சம்பவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
புல்-அப்
இதனை பிட்னஸ் பேஜ் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் “எந்த இடம் என்று முக்கியமில்லை, ட்ரெயினிங் செய்கிறோம் என்பதுதான்” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டு இருக்கின்றனர்.
மேலும் இந்த நிகழ்வு எங்கு நடந்தது? புல்-அப் செய்யும் இளைஞர் யார் என்பன குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. தற்பொழுது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ, தற்போது 2.3 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
