கிரீமி லேயர் வரைமுறையை கொண்டு வந்தால்..மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!
SC, ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரைமுறை கொண்டுவரும் யோசனைக்கு மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
SC, ST பிரிவு
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா, மனோஜ் மிஸ்ரா 7 நீதிபதி கொண்ட அமர்வில் SC, ST பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதில் பீலா திரிவேதியை தவிர பிற 6 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர்.
மேலும், எஸ்சி பிரிவினருக்கும் "கிரீமி லேயர்" என்னும் வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளும் ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறிவிட்டால் அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கக் கூடாது .
என்ன நினைச்சீங்க விஜய பத்தி...பயங்கர short temper அவரு!! பாப்போம்'னு இப்படி இருக்காரு - திருச்சி சூர்யா!!
கிரீமி லேயர்
OBC பிரிவில் இருப்பதைப் போலவே இந்த பிரிவினருக்கும் கிரீமி லேயர் வரைமுறை கொண்டு வர வேண்டும் என்று கூறி இருந்தது . இந்த நிலையில் SC, ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரைமுறை கொண்டுவரும் யோசனைக்கு மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர் .
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கிரீமி லேயர் வரைமுறை கொண்டுவரும் எந்த ஒரு முயற்சியையும் கடுமையாக எதிர்ப்பேன் என உறுதி என தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.