ஒரே நாடு ஒரே தேர்தல்; ஒப்புதல் அளித்த அமைச்சரவை - அடுத்து என்ன நடக்கும்?

India
By Sumathi Sep 18, 2024 11:45 AM GMT
Report

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் 

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த, பாஜக மும்முரம் காட்டி வருகிறது. தொடர்ந்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கருத்துக்களைக் கேட்க குழு அமைக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல்; ஒப்புதல் அளித்த அமைச்சரவை - அடுத்து என்ன நடக்கும்? | Union Cabinet Approval For One Nation One Election

அந்த குழு தற்போது தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. 18,626 பக்கம் கொண்ட இந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்; கருணாநிதியே ஆதரவளித்துள்ளார் - அண்ணாமலை!

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்; கருணாநிதியே ஆதரவளித்துள்ளார் - அண்ணாமலை!

அமைச்சரவை ஒப்புதல்

இதை நடைமுறைப்படுத்த, அரசியலமைப்பு பிரிவு 83, சட்டப்பேரவை தேர்தல் அரசியலமைப்பு பிரிவு 172 ஆகியவற்றைத் திருத்த வேண்டும். இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எளிதாக நிறைவேறலாம். இதற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என ராம் நாத் கோவிந்த் குழு தெரிவித்துள்ளது.

one nation one election

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை தொடர்பான ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெரும்பான்மை கிடைக்காததால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தீவிரம் காட்டவில்லை. அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும். அதற்கு முன் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.