2024 மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? என்னென்ன எதிர்பார்ப்புகள்!
2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் 2024
மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இந்த நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். நாட்டின் பொருளாதார முன்னுரிமை மற்றும் சவால்களை தீர்க்கும் வகையில், பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) எளிதாக்குவது மற்றும் வரி இணக்கத்தின் சுமையை குறைப்பது ஆகியவை அரசாங்கத்தின் திட்டங்களில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தின்
ஒரு பகுதியாக வளர்ச்சி இயந்திரங்களாக மாற்றப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனையை நிர்மலா சீதாராமன் படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.