குடியரசுத் தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
பட்ஜெட் 2023
2023- 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இது.
காலையில் 11 மணியளவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.
குடியரசு தலைவருடன் சந்திப்பு
இந்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்கு பிறகு நிதியமைச்சர் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று
பட்ஜெட் 2023-24க்கு ஒப்புதல் பெறுவார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசு தலைவருடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
