நூடுல்ஸ் பிரியர்களே.. உங்களுக்கு தான் இந்த வீடியோ - பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!

Viral Video India
By Vinothini Oct 26, 2023 04:49 AM GMT
Report

உணவுப்பொருளான நூடுல்ஸ் தயாரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஜங்க் ஃபுட்

இந்த காலத்தில் அதிகமான சுவையான ஜங்க் ஃபுட்ஸ் வந்துவிட்டது. இவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கி உண்டு மகிழ்கிறார்கள். ஆனால் இதில் எந்த ஒரு சத்தும் இல்லை, இதனை பற்றி தெரிந்தாலும் கூட ஜங்க் ஃபுட்களை கண்டால் இன்று மட்டும் சாப்பிடுவோம் என்று பலர் சாப்பிட்டு உடலை கெடுத்துக்கொள்கிறார்கள்.

noodles

அதிலும் நூடுல்ஸை குழந்தைகள் விரும்பி ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள். இதனால் நூடுல்சுக்கு சிறியதும் பெரியதுமாக ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் சுகாதாரமான முறையில் தாயரிக்கப்படுகிறது என்றால் அது கேள்விக்குறிதான்.

அசத்தல் அப்டேட்; இனி ரயில் பயணத்தில் zomato-வில் ஆர்டர் செய்யலாம் - IRCTC அறிவிப்பு!

அசத்தல் அப்டேட்; இனி ரயில் பயணத்தில் zomato-வில் ஆர்டர் செய்யலாம் - IRCTC அறிவிப்பு!

வீடியோ

இந்நிலையில், சமீபத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையில் நூடுல்ஸ் தயாரிக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. கையுறைகள் இல்லாமல் அவர்கள் எப்படி நூடுல்ஸ் தயார் செய்கிறார்கள் என்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. சில தொழிலாளர்கள் சட்டை கூட அணியாமல் இருந்தனர். நீங்கள் ஆடைகளை அணிந்தால், அதில் வியர்வை உறிஞ்சப்படும்.

ஆனால் ஆடை இல்லாமல் இந்த வியர்வை நேரடியாக நூடுல்ஸில் கலந்துவிடும். கொதிக்கும் நீரில் இருந்து கையுறை இல்லாமல் எடுக்கப்பட்டு அப்படியே உலர்த்தப்படுகிறது. உலர்ந்த பிறகு அதை வெறும் கையால் சில பெண்கள் பாக்கெட்டில் அடைக்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் இனி நூடுல்ஸ் வாங்குவதைத் தவிர்த்து விடுவார்கள்.

அதே நேரம் இது போன்ற உணவுப் பொருட்களை தயாரிப்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.