அடிமைகளின் நரகமான பாதாள சிறை.. இப்படியெல்லாம் கொடுமை நடக்குமா? விவரிக்கும் வீடியோ!
அடிமைகளை பாதாள சிறையில் அடைத்து எப்படி கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என பார்க்கலாம்.
பாதாள சிறை..
முந்தைய காலக்கட்டத்தில் மன்னர் மற்றும் பெரும் பணக்காரர்கள் கருப்பினத்தவர்களை விலைக்கு வாங்கி, தங்கள் வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இப்படி அடைக்கப்பட்ட அடிமைகளின் பாதாள சிறை பற்றிய ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கட்டிட கலைஞரான ரஸ்ஸல் என்பவர், பழமையான அந்த கட்டிடத்தின் பாதாள பகுதியை படம்பிடித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டார்.
கொடுமை
அந்த பாதாள சிறை தான்சானியா நாட்டின், சான்சிபார் நகரில் உள்ளதாம். இது குறித்து அந்த வீடியோவில் பேசிய ரஸ்ஸல், "இந்த இடம் மிகவும் சிறியது. மிகவும் வேதனையும் துன்பமும் நிறைந்தது. இது 1800-களில் சான்சிபாரில் உள்ள ஸ்டோன்டவுனில் ஓமானி அரேபியர்களால் சிறையில் அடைக்கப்பட்ட அடிமைகளின் வாழ்விடம்.
மலம் கழிக்கவும், தூங்கவும் ஒரே இடம். தண்ணீரும் அசுத்தமாக இருக்கும், வெளிச்சம் வராது, நோய் தொற்றும் அபாயம் அதிகம். சிறிய இடத்தில் 70 பேர் வரை அடைக்கப்பட்டு இருப்பார்கள்.
அனைத்து கொடுமைகளிலும் உயிர் பிழைத்தவர்கள் மற்றவர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு உள்ளது.