மறுபடி மொதல்ல இருந்தா.. தலைவிரித்தாடும் கொரோனா - மீண்டும் முழு ஊரடங்கு
கொரோனா பரவலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
சீனாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இதன் காரணமாக மாகாணத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில், பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பொது மக்கள் இந்த வாரம் வரை வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
ஊரடங்கு
கொரோனா பரிசோதனைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றை மூடும்படி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பெய்ஜிங்கில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.