800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - 2 மடங்கு அதிகரிப்பு!

China India
By Sumathi Nov 15, 2022 08:00 AM GMT
Report

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டவுள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை

உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 விழுக்காடு மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு விழுக்காட்டிற்கு குறைவாக பதிவானது.

800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - 2 மடங்கு அதிகரிப்பு! | World Population To Hit Eight Billion On November

இந்நிலையில், இன்று உலக மக்கள் தொகை 800 கோடி என்ற எண்ணிக்கையை எட்டவுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாவை,

800 கோடி

இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கும் என ஐநா கணித்துள்ளது. தொடர்ந்து, 2050ல் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 2 மடங்கு அதிகரித்து 4 பில்லியனில் இருந்து 8 பில்லியனாக உயரவுள்ளது. 2050க்கும் 9.7 பில்லியனாக உயரும் எனவும் கூறப்படுகிறது. 1950ம் ஆண்டு மக்கள் தொகை என்பது 2.5 பில்லியனாக இருந்தது.

72 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5.5 பில்லியன் அதிகரித்து 8 பில்லியனை தொடவுள்ளது.