நாளுக்கு 2000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு; நிதியை நிறுத்திய அமெரிக்கா - ஐநா வேதனை
எச்ஐவி தொற்று உயிரிழப்புகள் அதிகரிக்கும் என ஐநா வேதனை தெரிவித்துள்ளது.
எச்ஐவி பாதிப்பு
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், பல வெளிநாட்டு உதவிகளை நிறுத்தி உத்தரவிட்டுள்ளார். இதனால் பிற உலக நாடுகள் சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா. எய்ட்ஸ் தடுப்பு நிர்வாக இயக்குநர் வின்னி பியானிமா, அமெரிக்க நிதி நிறுத்தப்பட்டதால் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளது.
ஐநா வேதனை
ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எய்ட்ஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நாளொன்றுக்கு 2 ஆயிரம் புதிய பாதிப்புகள் உருவாகும். அமெரிக்க உதவி அமைப்பு மீண்டும் நிதியை விடுவிக்காவிட்டால், 4 ஆண்டுகளில் 63 லட்சம் பேர் எச்ஐவி தொற்றால் உயிரிழக்கக் கூடும்.
90களிலும், 2000 கால கட்டத்திலும் இருந்ததை போல எச்ஐவி காரணமான உயிரிழப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.