மக்கள் தொகை பாதியாக குறையும் - ஐநா கணிப்பால் அதிர்ச்சி!

United Nations China
By Sumathi Nov 19, 2024 12:28 PM GMT
Report

சீனாவின் மக்கள் தொகை பாதியாக குறையும் என ஐநா மதிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகை 

உலகில் அதிகப்படியான மக்கள் தொகையை கொண்டதாக இருந்த நாடு சீனா. கடந்த 2021ல் சீன மக்கள் தொகை 141 கோடியாக இருந்தது. அதன்பின் படி படியாக மக்கள் தொகையில் சரிவு ஏற்படத் தொடங்கியது.

china population

அந்த வகையில் 2025ல் மக்கள் தொகை, 136 கோடி என்ற நிலையை எட்டி விடும் என்று கருதப்படுகிறது. இதற்கு காரணமாக, அரசின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள், வாழ்க்கைச் செலவுகள், சீர்குலைந்த குடும்ப நடைமுறைகள் கூறப்படுகிறது.

உலகின் அதிக மக்கள் தொகை; டெல்லி 2வது இடம் - முதல் இடத்தில் எது தெரியுமா?

உலகின் அதிக மக்கள் தொகை; டெல்லி 2வது இடம் - முதல் இடத்தில் எது தெரியுமா?

ஐநா கணிப்பு

இந்நிலையில், இதன் விளைவாக, 2100ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை, தற்போதைய நிலையில் இருப்பதில் பாதியாக குறைந்து விடும் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகை பாதியாக குறையும் - ஐநா கணிப்பால் அதிர்ச்சி! | Un About Chinas Population Shocking Report

மேலும், இதன் காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும். முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். பொருளாதாரம், பென்சன் திட்டம், சுகாதார திட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.