மக்கள் தொகை: சீனாவை பின்னுக்குத்தள்ளும் இந்தியா - சரிந்த 60ஆண்டு சாதனை!

China India
By Sumathi Jan 18, 2023 11:32 AM GMT
Report

சீனாவை பின்னுக்குதள்ளி இந்தியா முந்தியிருக்கலாம் என ப்ளூம்பெர்க் என்ற அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. சீன தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது.

மக்கள் தொகை: சீனாவை பின்னுக்குத்தள்ளும் இந்தியா - சரிந்த 60ஆண்டு சாதனை! | India Population May Have Already Overtaken China

2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியன் ஆக குறைந்து உள்ளது”.

முந்தும் இந்தியா

தேசிய புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் மக்கள்தொகை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2022 இல் 850,000 ஆக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அதன் மதிப்பீட்டில்,

2022 மற்றும் 2050 க்கு இடையில் உலக மக்கள்தொகை அதிகரிப்பு காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் இருக்கும் என்று தெரிவித்தது.