பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழர் - யார் இந்த உமா குமரன்..?
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட உமா குமரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
உமா குமரன்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர்.
இதில், ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் தமிழர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ரிஷி சுனக்
உமா குமரனின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்களாவர். கடந்த 1980 காலகட்டத்தில் நடைபெற்ற உள்நாட்டு போரால் இவரது குடும்பம் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உமா குமாரன் கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.