நேட்டோவில் கண்டிப்பா இணைவோம் - உக்ரைன் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரஷ்யா
நேட்டோவில் உக்ரைன் நிச்சயம் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய போர் இன்றும் முடிந்தபாடில்லை. இதற்கிடையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறும்போது, ‘‘ அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் எங்களுக்கு ஆயுதம் வழங்கிவருகிறது.
உக்ரைன் உறுதி
இது ப்ரோட்டோகாலின் ஒரு பகுதிதான். நிச்சயம் நாங்கள் நேட்டோவில் இணைவோம். அது தான் எங்கள் இலக்கு. வருங்காலத்தில் அது சாத்தியமாகும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் போரிட மறுத்ததற்காக 24 வயது ராணுவ வீரருக்கு ரஷ்ய நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.