உக்ரைனுக்கு கரம் கொடுக்கும் நேட்டோ : எச்சரிக்கும் ரஷ்யா
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு அறிவிப்பிற்கு ரஷ்யா கடும் கண்டனம். உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த ரஷ்யா, இன்று தாக்குதலை குறைத்துள்ளது என தகவல் வெளியானது
ஆனால், தலைநகர் கீவ்-ஐ கைப்பற்ற மீண்டும் ரஷ்யா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருந்தது. உக்ரைன் மீது ரஷ்யாவின் இந்த தாக்குதல் உலக நாடுகள் மூன்றாம் உலகப்போரின் உச்சம் என எச்சரிக்கை விடுத்தது வருகிறது.
ரஷ்யாவை எதிர்த்து போராட அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு டாங்கிகள், போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது.
உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்து அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்க முன் வந்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ஐந்தாவது நாளாக போர் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது