நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய உக்ரைன் ராணுவ வீரர்கள் - வைரலாகும் வீடியோ!

S. S. Rajamouli Ukraine RRR
By Vinothini Jun 04, 2023 08:57 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் நடனம் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆர் ஆர் ஆர் படம்

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம்.

இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதோடு, ஆஸ்கார் விருதையும் வென்றது.

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய உக்ரைன் ராணுவ வீரர்கள் - வைரலாகும் வீடியோ! | Ukraine Soldiers Dance For Rrr Movie Song

படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த பாடலுக்கு ராம்சரண் மற்றும் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

உக்ரைன்

இதனை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே 'நாட்டு நாட்டு' பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் இதனை பாராட்டி வருகின்றனர்.