லடாக்கில் கோர விபத்து : ஆற்றில் கவிழ்ந்த ராணுவ வாகனம் - 7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
லடாக்கின் ஷ்யோக் ஆற்றில் ராணுவ வீரர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று 26 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு பார்தாபூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்காக வாகனம் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது காலை சுமார் 9 மணியளவில், தோயிஸ் என்ற பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாகனம் நிலை தடுமாறி 60 அடி ஆழமுள்ள ஷ்யோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த அனைவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில், இதுவரை 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த மற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருபதாக ராணுவ செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.