இரண்டரை வருஷங்கள்தான்..1 கோடி மக்கள் தொகையை இழந்த நாடு - ஏன் தெரியுமா?
இரண்டரை ஆண்டுகளில் மட்டும் நாடு ஒன்றில் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது.
ரஷ்யாவுடனான போர்
உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவுடன் உக்ரைன் போர் துவங்கிய பின்,
கடந்த இரண்டரை ஆண்டுகளில் உக்ரைனில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி குறைந்துள்ளது. இங்கு சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. மக்கள்தொகையின் தற்போதைய சூழ்நிலையை பராமரிக்க, குறைந்தபட்ச பிறப்பு 2.1 சதவீதம் தேவைப்படுகிறது.
மக்கள் தொகை
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதைந்த பிறகு உருவான உக்ரைன், அப்போது ஐந்து கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு இங்கு மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
ரஷ்யாவுடனான போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை குறைவதற்கு உக்ரைனில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்ததே மிகப்பெரிய காரணமாக கூறப்படுகிறது.
தற்போது சுமார் 67 லட்சம் உக்ரைனியர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.