அமெரிக்கா விரைவில் திவாலாகும் - பகீர் கிளப்பும் எலான் மஸ்க்
அமெரிக்கா விரைவில் திவாலாகும் அபாயம் உள்ளதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். மேலும் அவரின் பிரச்சாரத்திற்காக பல நூறு கோடிகளை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
திவாலாகும் அமெரிக்கா
இதனிடையே கடந்த மே மாதம் அமெரிக்காவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நாட்டின் கடன் சுமார் ரூ. 3 ஆயிரம் லட்சம் கோடியை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், "அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும். இல்லையெனில் நாடு விரைவில் திவாலாகும் வாய்ப்பு உள்ளது" என பேசியுள்ளார்.