இதை செய்தால் தினமும் ஒருவருக்கு 8 கோடி பரிசு - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு
கையெழுத்திடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து பரிசு வழங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவளித்துள்ளார். பல இடங்களில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கையெழுத்திட்டால் 1 மில்லியன்
மேலும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் ஆயுதம் வைத்து கொள்ளும் உரிமையை ஆதரிப்பவர்கள் இந்த மனுவில் கையெழுத்திடுங்கள் என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை இதில் கையெழுத்து இடுபவர்களுக்கு தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ8.4 கோடி) அளிப்பதாக அறிவித்துள்ளார். இதன்படி நேற்று பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்வில் ஒரு மில்லியன் டாலருக்கான காசோலையை ஜான் ட்ரெஹர்(john dreher) என்ற நபருக்கு வழங்கியுள்ளார்.
தற்போது வரை டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக தனது America PCA அமைப்பு மூலம் எலான் மஸ்க் 75 மில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ630 கோடி) வழங்கியுள்ளார்.