பணிக்கு Sports Shoe-வில் வந்த இளம் பெண்.. 32 லட்சம் இழப்பீடு வழங்கிய நிறுவனம் - பின்னணி என்ன..?

England World Sports
By Vidhya Senthil Dec 30, 2024 07:00 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

இளம் பெண் ஒருவர் பணிக்கு Sports Shoe-வில் வந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து 

இங்கிலாந்து நாட்டில் மேக்சிமஸ் யுகே சர்வீசஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் எலிசபெத் பெனாசி (வயது20) என்ற இளம் பெண் கடந்த 2022 ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.

பணிக்கு Sports Shoe-வில் வந்த இளம் பெண்.. 

அந்த நிறுவனத்தின் ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்து அவருக்குத் தெரியாததால், ஒரு நாள் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து பணிக்குச் சென்றுள்ளார்.அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் சிலரும் அதுபோன்ற ஷூவை அணிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்களுக்கு தாய்ப்பால் விருந்து.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர்- பகீர் பின்னணி!

குடும்ப உறுப்பினர்களுக்கு தாய்ப்பால் விருந்து.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர்- பகீர் பின்னணி!

ஆனால் எலிசபெத் பெனாசி மட்டும் கடுமையாகப் பேசி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது குறித்து வேலை வாய்ப்பு தீர்ப்பாயத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தன்னை குழந்தை போல நடத்தியதாகவும், சிறிய சிறிய தவறுகளை அனைவரின் முன்னிலையில் பேசியதாகவும், தன்னைத் தனிமைப்படுத்தியதாகவும் கூறினார்.

பணிநீக்கம் 

ஆனால் இதற்கு மேக்ஸிமஸ் யு.கே சர்வீஸ் நிறுவனம் எலிசபெத் பெனாசியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.மேலும் வேலையில் எலிசபெத் பெனாசியின் செயல்திறன் மோசமாக இருந்ததன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

பணிக்கு Sports Shoe-வில் வந்த இளம் பெண்..

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய நீதிபதி ஃபார்வெல் எலிசபெத் பெனாசிக்கு ஆதரவாகச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.மேலும் 37,700 டாலர்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது கிட்டதட்ட 32 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ஆகும்.