கட்டுப்பாட்டை மீறிய விந்தணு தானம்; உலகளவில் உடன்பிறப்புகள் - எச்சரிக்கை!

England
By Sumathi Aug 23, 2024 07:16 AM GMT
Report

அதிகரிக்கும் விந்தணு தானம் குறித்து நாளிதழ் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

விந்தணு தானம்

இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறியுள்ளது.

sperm donation

விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்க முடியாது. ஆனால், விந்தணுவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்குள்ள பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்புள்ளது.

விந்தணு, கருமுட்டை தானம் செய்தவர்களுக்கு குழந்தை மீதான உறவு இதுதான் - நீதிமன்றம் தீர்ப்பு!

விந்தணு, கருமுட்டை தானம் செய்தவர்களுக்கு குழந்தை மீதான உறவு இதுதான் - நீதிமன்றம் தீர்ப்பு!


ஏற்றுமதி

கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து விந்தணு மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்து வந்தது. அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது. 2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 7,542 ஸ்ட்ரா விந்து இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை மீறிய விந்தணு தானம்; உலகளவில் உடன்பிறப்புகள் - எச்சரிக்கை! | Uk Sperm Donations Being Exported

உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் முட்டை வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளது ஏற்றுமதியில் 90 சதவீத பங்கைக் கொண்ட ஐரோப்பிய விந்தணு வங்கி,

ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் என உலகளாவிய வரம்பைப் பயன்படுத்துகிறது. அதன் நன்கொடையாளர்கள் சராசரியாக 25 குடும்பங்களுக்கு உதவுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.