550 குழந்தைகளுக்கு ஒரே தகப்பன் - விந்தணு டோனரின் மோசடி ; அதிர்ச்சில் பெற்றோர்.
நெதர்லாந்தில் ஒரு நபர் சட்டவிரோதமாக 550 குழந்தைகள் உருவாக தனது விந்தணு தானமாக வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விந்தணு தானம்
நெதர்லாந்தை சேர்ந்தவர் ஜொனாதன் ஜேக்கப் என்ற இசை கலைஞன் வயது 41 , இவர் ஆன்லைன் மூலம் தனது விந்தணுவை தானம் செய்து வந்துள்ளார் .நெதர்லாந்து அரசு சட்டப்படி ஒரு நபர் 12 பெண்களுக்கு மட்டுமே தனது விந்தணுவை தனமாக தரவேண்டும் .அதாவது 25 குழந்தைகள் உருவாக்க மட்டுமே விந்தணு டோனருக்கு அனுமதி உண்டு .
ஆனால் இந்த நபர் 550 குழந்தைகள் உருவாக்க விந்தணுவை தானம் செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த ஜொனாதன் ஜேக்கப் முதன் முதலில் விந்தணு தானம் செய்து உள்ளார் .
அதற்கு சிறிதளவு பணம் கிடைத்துள்ளது . இதனால் விந்தணு தானத்தை பணத்திற்காக தவறான வழியில் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
இணையத்தின் வழியாக குழந்தைகள் இல்லாத பெற்றோர்களை தொடர்பு கொண்டு தான் ஒரு தொழில் அதிபர் என அறிமுகப்படுத்தி தனது விந்தணுவை தானம் செய்ய போவதாக கூறி தானம் செய்து இருக்கிறார்.
இவ்வாறாக 13 கிளினிக்குகளில் விந்தணு தானம் செய்து உள்ளார் . இதில் 11 கிளினிக்குகள் நெதர்லாந்தில் உள்ளது .மேலும் இணையத்தின் மூலம் சர்வதேச விந்து வங்கிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் .
வழக்கு
இந்த நிலையில் டோனர்கைண்ட் (DonorKind) என்ற அறக்கட்டளைக்கு ஜொனாதன் ஜேக்கப் தனது விந்தணு தானம் செய்தபோது, இவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளை உருவாக்க விந்தணு தானம் செய்துயுள்ளது தெரியவந்துள்ளது .
இந்த நபரால் பிறந்த குழந்தைகள் வளர்ந்து தங்களுக்கு நூற்றுக் கணக்கான சகோதரர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலை அறிந்தால் மிகப்பெரிய உளவியல் சிக்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.இது உறவு முறைக்குள் புணர்ச்சியை ஏற்படுத்து . இதனால் ஜொனாதன் ஜேக்கப் மீது வழக்கு தொடுத்துள்ளது டோனர்கைண்ட் (DonorKind ) நிறுவனம்.
சர்வதேச விந்து வங்கி தொடர்பு
இந்நிலையில் நெதர்லாந்து காவல் துறை ஜொனாதன் ஜேக்கப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளது . மேலும் இந்த நபர் உக்ரைன் ,டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விந்தணு தானம் செய்துள்ளர் .
விந்தணு தானத்தை வியாபாரமாக்கி வருகிறார் ஜேக்கப். இதை தடுக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர வேண்டும் எனவும் நெதர்லாந்து காவல்துறையினர் அறிவிப்பு வெளியீட்டுயுள்ளனர் .