மேலாடை மட்டும்தான்; கீழாடையே தேவையில்லை - ஆண்கள், பெண்கள் உற்சாகம்
கீழாடை இல்லா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
No Trousers Tube Day
இங்கிலாந்தில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.
இதனால் கீழாடைகளை அணியாமல் ஒரு சிலர் சட்டை மற்றும் டை அணிந்தபடியும், சிலர் குளிருக்கு ஏதுவாக கம்பளி ஆடை அணிந்தும் வந்திருந்தனர்.
எதிர்பாராத மகிழ்ச்சி, இன்பம் மற்றும் குழப்பம் ஆகியவற்றுக்கான தருணங்களை ஏற்படுத்துவதே இதன் ஒட்டுமொத்த நோக்கம் என கூறப்படுகிறது. இதற்காக பேஸ்புக் பக்கத்தில் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.
மக்கள் உற்சாகம்
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு குறைந்த ஆடைகளை அணிந்து வாருங்கள். நீங்கள் உங்கள் கீழாடையை மறந்து வீட்டீர்கள் என்பது போல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், ஆண் மற்றும் பெண் பயணிகள் ரயிலில் பயணித்தபோது, ஒரு சிலர் தேர்வுக்கு தயாராவது போன்று புத்தகங்களை படித்தபடி காணப்பட்டனர்.
சிலர் ரயிலில் தொங்கி கொண்டும், ஒரு சிலர் நடனம் ஆடியபடியும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.