வீடே தீப்பிடித்து எரிந்தாலும் அந்த புகைப்படத்தை பாதுகாக்கனும் - பெண் வீடியோவால் அதிர்ச்சி!
வடகொரிய பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
வட கொரியா சட்டம்
வட கொரியாவில் இருந்து வெளியேறிய பெண் ஒருவருடன் ஜோ ரோகன் உரையாடுகிறார். அவர் தனது நாட்டில் உள்ள கடினமான சட்ட திட்டங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
அதில், வட கொரியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தலைவர் கிம் ஜாங் உன் இன் புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும். அதை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பெரும்பாலும் இன்ஸ்பெக்டர்கள் திடீரென இரவில் வீடுகளுக்குள் நுழைந்து கிம் ஜாங் உன் இன் புகைப்படம் சுத்தமாக இருக்கிறதா?
அதிர்ச்சி தகவல்
இல்லை தூசி ஏதேனும் படிந்துள்ளதா என்பதை சரிபார்ப்பார்கள். புகைப்படத்தில் ஏதேனும் தூசி இருந்தால், அதை விசுவாசமின்மையின் அடையாளமாக கருதி, அந்த வீட்டில் உள்ள நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.
கைது செய்யப்படுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை, மரண தண்டனையாக இருக்கலாம் அல்லது அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறையினருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இது தவிர, ஒரு வீடு தீப்பிடித்தால், அந்த வீட்டில் உள்ள கிம் ஜாங் உன் இன் புகைப்படத்தைக் காப்பாற்றுவது, ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதை விட முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து, வைரலாகி இதுவரை 51 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.