தந்தையின் விந்தணு; குழந்தைப் பெற்ற மகன் - அதிர்ச்சி பின்னணி!
நபர் ஒருவர் தந்தையின் விந்தணுவை கொண்டு குழந்தை பெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பேறு
இங்கிலாந்து, தெற்கு யார்ஷயர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து அவருக்கு குழந்தை பேறு பாக்கியம் இல்லாததால், ஐவிஎஃப் சிகிச்சைக்கு அணுகியுள்ளார்.
அந்த சென்டரின் ஆலோசணைப்படி அவரது மனைவி கருத்தரிக்க வேறு ஒருவரது விந்தணுவை பெற வேண்டும் எனவும் அதற்கு அதிகதொகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் வசதி இல்லாததால் தனது தந்தையின் விந்தணுவைப் பெற்றிருக்கிறார்.
ஐவிஎஃப் சிகிச்சை
அதில் அவரது விந்தணுவையும் கலந்து தனது மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தியதின் மூலம் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதியின் நகராட்சி நிர்வாகமான பார்ன்ஸ்லி மெட்ரோபாலிட்டன் போரோ கவுன்சில், குழந்தையின் உண்மையான தந்தயை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
வழக்கில் மேற்கொண்ட விசாரணையில் தந்தை விந்தணுவை பயண்படுத்தி குழந்தை பெற்றதை அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, நீதிமன்றம் குழந்தை உண்மையான தந்தை யார் என்று அறிய டிஎன்ஏ சோதணை வேண்டாம். குழந்தையின் தந்தை யார் என நகராட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.
இது நகராட்சி கவுன்சிலுக்கு தேவையில்லாத வேலை. பெற்றோர்கள் வழக்கு தொடுத்தால், டிஎன்ஏ பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம். மற்றபடி கவுன்சிலின் பேச்சை கேட்டு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.