விந்தணு குறைபாடா? இந்த பழக்கத்தை முதலில் கைவிடுங்கள் - அதிகரிக்கும் உணவு லிஸ்ட் இதோ!

Healthy Food Recipes
By Sumathi Aug 05, 2023 11:13 AM GMT
Sumathi

Sumathi

in உணவு
Report

விந்தணு குறைபாட்டால் குழந்தை இன்றி தவிக்கும் நிலை அதிகரித்துள்ளது.

விந்தணு குறைபாடு

விந்தணுக்கள் குறைவாக இருந்தால் குழந்தையின்மை பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. விந்துவில் உள்ள உயிரணுக்களை எப்படி அதிகரிப்பது? அதற்காக நாம் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிந்துக் கொள்வது அவசியம்.

விந்தணு குறைபாடா? இந்த பழக்கத்தை முதலில் கைவிடுங்கள் - அதிகரிக்கும் உணவு லிஸ்ட் இதோ! | Best Foods To Increase Sperm Count

விந்தணுக்களை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாக ஓடுதல், நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை செய்யும்பொழுது விந்தணுக்கள் நன்றாக அதிகரிக்கும்.

உணவு வகைகள்

அதேபோல், யோகா, தியானம் உள்ளிட்டவற்றை செய்தால் மன அழுத்தம் குறைந்து தளர்வு நிலை உண்டாகும் அந்த சமயத்தில் விந்தணு உற்பத்தி பணி நன்றாக நடக்கும். புகைப்பிடித்தல், மது அருந்தும் பழக்கம் விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துவிடும்.

விந்தணு குறைபாடா? இந்த பழக்கத்தை முதலில் கைவிடுங்கள் - அதிகரிக்கும் உணவு லிஸ்ட் இதோ! | Best Foods To Increase Sperm Count

எனவே அதனை தவிர்த்து விடுதல் நல்லது. பாக்ஸ் டைப்பில் கிடைக்கும் உள்ளாடைகளை அணியுங்கள். நெருக்கமான உள்ளாடை வடிவை தவிர்த்துக் கொள்ளலாம். இரவில் உறங்குவதற்கு முன்னதாக இரண்டு ஏலக்காய்களை சாப்பிடுங்கள். கீரைகளை உணவாக எடுத்துக் கொள்வதை இயல்பாக மாற்றுங்கள்.

ஏ, பி1 சி என்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழங்களை தினமும் ஒன்றாவது எடுத்துக் கொள்ளுங்கள். மாதுளை பழம், வால்நட்ஸ், முட்டை, மீன் விந்தணு உயிரணுக்களை அதிகரிப்பதற்கு உதவும்.