ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை - எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதனை
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் குறித்த ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரை
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் குறித்த ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டது. அதில், ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை எலிக்குச் செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள், விந்தணு நீந்துவதை நிறுத்தியதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆதாரம் கருத்தடை உலகில் கேம் சேஞ்சிங்காக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆண்களுக்கான இந்தக் கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஹார்மோன் குறைபாட்டால் உண்டாகும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வில், `TDI-11861 எனப்படும் மருந்தின் டோஸ் கொடுக்கப்பட்டது. இது இனச்சேர்க்கையின் போதும் அதற்குப் பின்னரும்,
எலிகள் மீது ஆய்வு
விந்தணுக்களை அசைய விடாமல் சுமார் 3 மணி நேரம் தடுத்துள்ளது. 3 மணி நேரத்திற்குப் பின் இயக்கம் திரும்பி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குப் பிறகே அடுத்த விந்தணுக்கள் இயல்பாகச் செயல்படும் நிலைக்குத் திரும்பியுள்ளன. நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மெடிசினில் ஆராய்ச்சியாளராக இருக்கும், டாக்டர் மெலனி பால்பாக் (Melanie Balbach) கூறுகையில்,
இது மனிதர்களில் வேலை செய்தால், ஆண்கள் எப்போது வேண்டுமானாலும், தேவைப்படும்போது எடுத்துக் கொள்ள முடியும். கருவுறுதல் பற்றி தினசரி முடிவுகளை எடுக்க முடியும்.
ஆனால் இது பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்காது. அதற்கு ஆணுறைகள் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார்.