50 நிமிடம் நின்ற இதயத்துடிப்பு; மீண்டும் உயிர்பெற்ற நபர் - அதிசய நிகழ்வு!

Swetha
in ஐக்கிய இராச்சியம்Report this article
50 நிமிடங்கள் வரை இதயத்துடிப்பு நின்று போன ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
நின்ற இதயத்துடிப்பு
இங்கிலாந்தை சேர்ந்த பென் வில்சன் (31) கடந்த மாதம் வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு அவரது காதலி ரெபெக்கா ஹோம்ஸ் மீது சாய்ந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சுயநினைவின்றி இருந்த அவருக்கு மருத்துவர்கள் CPR வழங்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும்,50 நிமிடங்களுக்கு இடையில் இரண்டே முறை தான் இதயம் துடித்துள்ள நிலையில், அவருக்கு 17 முறை டீஃப்ரிலேட்டர் (defibrillator) மூலம் எலெக்ட்ரிக் கரன்ட் செலுத்தப்பட்டது.
பல முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவ குழு குடும்பத்தினரிடம் இழப்புக்குத் தயாராக இருக்கும்படி கூறியுள்ளனர்.
அதிசய நிகழ்வு
மருத்துவ ரீதியாக மாரடைப்பு ஏற்பட்டு இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகக் கூறப்பட்டாலும், கணிப்பைத் தாண்டி பென் வில்சன் அதிலிருந்து மீண்டார். இதனையடுத்து நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது மூளையை ஆக்ஸிஜன் பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்க ஐந்து வாரங்களுக்கு கோமாவில் வைத்துள்ளனர்.
தன் காதலி ரெபெக்காவிடம் அவ்வப்போது பேசினாலும், அவருக்கு குறுகிய கால நினைவாற்றல் பிரச்சனை இருந்து வருகிறது.தற்போது குணமடைந்து வீட்டிற்குத் திரும்பிய பென் வில்சன் தனது காதலியை திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டு வருகிறார்.
அதோடு மோசமான சூழலில் விட்டுப் பிரிந்து விடமால் சிகிச்சை முழுவதும் உடனிருந்து கவனித்துக் கொண்டதால் இவர்களின் காதலையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.