40 நிமிடங்கள் நின்ற இதயத்துடிப்பு; செத்து பிழைத்த பெண் - இறப்பிற்கு பின் என்ன நடந்தது..?

Death England World
By Jiyath Dec 31, 2023 04:36 AM GMT
Report

பெண் ஒருவர் 40 நிமிடங்கள் இதயத்துடிப்பு நின்று மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நின்ற இதயத்துடிப்பு 

இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியினர் ஸ்டூ - கிர்ஸ்டி போர்டோஃப்ட். இந்த தம்பதியினர் தங்களது 3 குழந்தைகளுடன் அன்று இரவு பார்ட்டிக்கு திட்டமிட்டிருந்தனர்.

40 நிமிடங்கள் நின்ற இதயத்துடிப்பு; செத்து பிழைத்த பெண் - இறப்பிற்கு பின் என்ன நடந்தது..? | Not Alive Experience Shared Resurrected Woman

அப்போது மனைவி கிறிஸ்டி திடீரென மயக்கமடைய, கணவர் ஸ்டூ உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் கிறிஸ்டியின் இதயத்துடிப்பு குறைந்து ஒருகட்டத்தில் முற்றிலுமாக நின்றுள்ளது.

சிபிஆர் போன்ற எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் போயுள்ளது. மேலும், இறுதி வேலைகளைப் பார்க்கச் சொல்லி மருத்துவர்கள் ஸ்டூவிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 40 நிமிடங்கள் கழித்து திடீரென கிறிஸ்டியின் இதயம் துடிக்கத் தொடங்கி, அவர் கண்விழித்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .

பார்க்கிற்கு சென்ற இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம் - ஒரேநாளில் கோடீஸ்வரன்!

பார்க்கிற்கு சென்ற இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம் - ஒரேநாளில் கோடீஸ்வரன்!

என்ன நடந்தது..?

இதனையடுத்து தனக்கு நடந்தவற்றை பற்றி கிறிஸ்டி கூறுகையில் " எனக்கு மயக்கம் ஏற்படுவதைப் போன்ற உணர்வு உண்டானது வரை தான் எனக்கு நினைவிருக்கிறது.

40 நிமிடங்கள் நின்ற இதயத்துடிப்பு; செத்து பிழைத்த பெண் - இறப்பிற்கு பின் என்ன நடந்தது..? | Not Alive Experience Shared Resurrected Woman

பிறகு எனது உடல் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்குவதை போல உணர்ந்தேன். ஆனால் வலி இல்லை. அதன் பின்னர், சரிவர விவரிக்க முடியாத ஒரு உருவம் எனக்கு முன்பு நின்றது. அது எனது ஆத்மா என்றே நம்புகிறேன். அதனிடம் நான், எனது மகன்களுக்கும் அப்பாவுக்கும் கூற வேண்டிய சில விஷயங்களை எழுதுமாறு கூறுகிறேன். பிறகு என் தோழியிடம், "என் உடல் முழுவதும் நொறுங்கிவிட்டது. மீண்டும் அதற்குள் செல்ல முடியுமா என்று தெரியவில்லை" என நான் கூறினேன்.

ஆனால் என் தோழி, "இன்னும் காலம் முடியவில்லை. உன்னால் உடலுக்குள் போக முடியும். நீ போ" என்னை அதட்டி போகச் சொன்னார். அவ்வளவுதான். நான் கண் விழித்துவிட்டேன். நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னை மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்" என்றார்.