பார்க்கிற்கு சென்ற இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம் - ஒரேநாளில் கோடீஸ்வரன்!
பார்க்கிற்கு விசிட்டராக சென்ற போது இளைஞர் ஒருவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
கிளாஸ் பீஸ்
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜெர்ரி எவன்ஸ் என்ற இளைஞர் 'கிரேட்டர் ஆஃப் டயமண்ட்ஸ் ஸ்டேட்' பார்க்கிற்கு சென்றுள்ளார்.
911 ஏக்கர் கொண்ட கொண்ட இந்த பூங்கா, 37.5 ஏக்கர் உழவு வயலையும் கொண்டுள்ளது. மேலும் இந்த பார்க் பொதுமக்கள் அணுகக் கூடியதாக இருக்கும் சில வைரங்கள் கண்டறியப்பட்ட தளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. ஒருவேளை இந்த பார்க்கில் யாரேனும் வைரங்களை கண்டெடுத்தால், அவற்றை அவர்களே வைத்திருக்கவும் இந்த பார்க் அனுமதியளிக்கிறது.
இதற்கிடையில் இந்த பார்க்கிற்கு சென்ற ஜெர்ரி எவன்ஸ் தனது காலடியிலிருந்து பளபளப்பான ஒரு சிறிய கிளாஸ் பீஸ் போன்ற ஒன்றை கண்டெடுத்துள்ளார். அது கண்ணாடி துண்டாக இருக்கலாம் என்று நினைத்த அவருக்கு, ஒருவேளை அது வைரமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
அடித்தது ஜாக்பாட்
இதனால் அந்த பொருளை அமெரிக்காவின் ஜெமோலாஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து எவன்ஸை தொடர்பு கொண்ட Gemological நிறுவனம் அவர் கொடுத்த பொருள் உண்மையில் கிட்டத்தட்ட நிறமற்ற வைரம் என்று கூறியுள்ளது.
அதன் மதிப்பு 4.87 காரட் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் தனக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியில் ஜெர்ரி எவன்ஸ் துள்ளிக்குதித்துள்ளார். மேலும், இதுகுறித்து கூறிய எவன்ஸ் "உண்மையில் நான் கண்டெடுத்தது ஒரு கிளாஸ் பீஸாக இருக்கக் கூடும் என்று தான் நினைத்தேன்.
ஆனால் ஒருவேளை அது வைரமாக இருக்கக்கூடாதா என்ற எனது நினைப்பு இப்படி நிஜமாகும் என்று உண்மையில் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.