முறைப்பெண்ணை திருமணம் செய்ய தடையா? அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்
First Cousin திருமணங்களை தடை செய்ய பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பி முன்மொழிந்துள்ளார்.
முறைப்பெண் திருமணம்
சில தலைமுறைகளுக்கு முன்னர் பெரும்பாலான திருமணங்கள் சொந்தத்தின் உள்ளேயே நடைபெறும். அதாவது அத்தை மகள், மாமா மகள் என முறை பெண்ணைதான் திருமணம் செய்வார்கள்.
ஆனால் தற்போது அந்த வகையிலான திருமணங்கள் குறைந்து வருகிறது. மேலும், சொந்தத்தின் உள்ளே திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தடை விதிக்க குரல்
இந்நிலையில் முறை பெண்ணை திருமணம் செய்வதை தடை விதிக்க சட்டம் கொண்டு வருமாறு பிரிட்டனில் குரல் எழுந்துள்ளது. தற்போதுள்ள திருமண சட்டப்படி சகோதரர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோரை திருமணம் செய்ய மட்டுமே தடை உள்ளது. இந்நிலையில் பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பியான ரிச்சர்ட் ஹோல்டன் First Cousin திருமணங்களை தடை செய்ய நாடாளுமன்றத்தில் முன் மொழிந்துள்ளார்.
இந்த திருமணங்களால் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் எனவே இதற்கு தடை விதித்து திருமண சட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரிச்சர்ட் ஹோல்டன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் அலெக்ஸ் டேவிஸ்-ஜோன்ஸ், இந்த விவகாரத்தில் திருமணங்கள் குறித்த சட்ட ஆணையத்தின் 2022 அறிக்கை உட்பட திருமணச் சட்டங்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திற்கு நேரம் தேவை என்று தெரிவித்துள்ளார்.