முஸ்லீம் 4 திருமணம் செய்து கொள்ளலாமா? நீதிமன்றம் கூறியது என்ன?
முஸ்லிம் நபர் ஒருவரின் 3வது திருமணத்தை பதிவு செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3வது திருமணம்
மஹாராஷ்டிர மாநிலம், தானேவைச் சேர்ந்த மெசோவர் சோவா என்ற முஸ்லிம் இளைஞருக்கு ஏற்கனவே இரண்டு மனைவியர் உள்ளனர்.
இந்நிலையில் இவர் ,மூன்றாவதாக அல்ஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தங்களின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய, தானே மாநகராட்சி அலுவலகத்தை நாடினார்.
முஸ்லிம் தனிநபர் சட்டம்
மஹாராஷ்டிரா திருமண பதிவு சட்டத்தின் கீழ், ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும் என கூறிய மாநகராட்சி அதிகாரிகள் மெசோவர் சோவாவின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட சட்டங்களின் கீழ், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. மகாராஷ்டிரா திருமண சட்டப்படி ஒரு திருமணத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
ஆனால் அதிகாரிகளின் வாதத்தை ஏற்றுக்கொண்டால், மகாராஷ்டிரா திருமண சட்டம், முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டத்தை மீறுவதாக அமைந்து விடும். இந்த சட்டத்தில்தான் அவரது இரண்டாவது திருமணத்தை பதிவு செய்துள்ளார்கள்.
பாஸ்போர்ட்
மேலும், திருமணத்தை பதிவு செய்யும் போது சில ஆவணங்களை தம்பதிகள் வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததால், 2 வாரத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பின் 10 நாட்களில் திருமணத்தை பதிவு செய்வது அல்லது மறுப்பது நியாயமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அந்த அல்ஜீரியா பெண்ணின் பாஸ்போர்ட் கடந்த மே மாதம் காலாவதி ஆன நிலையில், அந்த பெண்ணின் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.