இத்தோடு சீன உறவின் பொற்காலம் முடிந்தது - பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டம்

China Rishi Sunak England
By Sumathi Nov 30, 2022 05:34 AM GMT
Report

இங்கிலாந்து-சீன உறவின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

சீன உறவு

சீனா, ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை போலீஸார் அடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தோடு சீன உறவின் பொற்காலம் முடிந்தது - பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டம் | Uk China Relations Over Rishi Sunaks Announcement

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக தனது வெளியுறவு கொள்கை குறித்து உரையாற்றினார். அதில், "முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது.

ரிஷி சுனக்  அதிரடி

வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது.

ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு முதல் அச்சுறுத்தல்" என தெரிவித்துள்ளார்.