திருநங்கைகள் பெண்களா... பகீர் கிளப்பிய ரிஷி சுனக் - நடந்தது என்ன?
திருநங்கைகள் குறித்து ரிஷி சுனக் பேசிய வீடியோ ஒன்று தற்போது பேசுபொருளாகி உள்ளது.
ரிஷி சுனக்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் ரிஷி சுனக். முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் எனும் பெருமை பெற்றவர். இந்நிலையில் இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல டிவி இன்டர்வியூவில் ரிஷி சுனக்கிடம், `யெஸ் ஆர் நோ’ கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் `திருநங்கைகள் பெண்களா’ என்ற ஒரு கேள்வி ரிஷி சுனக்கிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ரிஷி சுனக் `இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.
திருநங்கைகள்?
இது தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலர் திருநங்கைகளுக்கு ரிஷி சுனக் எதிரானவரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது இந்த நிலைப்பாடு திருநர்கள் உயிரியல் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்கிற கருத்தாக்கத்தில் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதாவது ‘திருநங்கைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் உயிரியல் அடிப்படையில் அவர்களுக்கு கழிவறைகள் மற்றும் விளையாட்டு போன்ற விவகாரங்களில் தனிப்பட்ட உரிமை அளிக்கப்பட வேண்டும்’ என முன்பு அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது