நெட் தேர்வு முறைகேடு - விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராமவாசிகள் தாக்குதல்

NEET Central Bureau of Investigation Bihar
By Karthikraja Jun 24, 2024 04:45 AM GMT
Report

 நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்க சென்ற CBI அதிகாரிகள் மீது கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுஜிசி நெட் தேர்வு

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்க்கான யுஜிசி நெட் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் வினாத் தாள் கசிவு போன்ற முறைகேடுகளால்  நெட் தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கபட்டது.  

ugc net exam 2024

மேலும் இந்த தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசுஅறிவித்தது. மேலும் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதை தொடர்ந்து அந்த வழக்கையும் விசாரிக்கும் பொறுப்பை சிபிஐ ஏற்றுள்ளது. 

ரூ.32 லட்சத்துக்கு நீட் வினாத் தாள் விற்பனை - மாணவர் பகீர் வாக்குமூலம்

ரூ.32 லட்சத்துக்கு நீட் வினாத் தாள் விற்பனை - மாணவர் பகீர் வாக்குமூலம்

சிபிஐ அதிகாரிகள்

இந்நிலையில் நெட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழு பீகார் மாநிலம், நவாடா கிராமத்துக்குச் சென்றது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிபிஐ அதிகாரிகளின் வாகனத்தை அப்படியே சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

cbi officers attacked in bihar photos

இதன் பின் சிபிஐ அதிகாரிகள் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே காவல் துறை வந்து சிபிஐ அதிகாரிகளை கிராம மக்களிடமிருந்து மீட்டு இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய காணொளியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். போலி அதிகாரிகள் என நினைத்து கிராம மக்கள் தாக்கியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.